வேதனை விம்மலின் போது கசிந்தாலும்,விரும்பியே இன்பத்தில் திளைத்தாலும் வெளிவரும் கண்ணீர் கரிக்கத்தான் செய்வதுபோல் விளையாட்டாய் விளைந்தாலென்ன ,வினையாக வந்தாலென்ன கசியும் குருதி செம்மைதனே .கனக்கத்தானே செய்கிறது இதயவறை,சொல்கிறது விதி இதயழுத்தம் என்று.பகுத்தறிவாளரிடையே பாசத்தைப் பகர்வதென்னவோ பைத்தியகாரத்தன்மையென தோன்றக்கூடும்.திக்கற்றவர்க்கு திசைகாட்டியாய் வக்கற்றவனுக்கு வழிகாட்டியாய் என்னதான் செய்யமுடியுமோ ஒளியூட்டல் செய்ய எத்தணிக்க விளைகிறேன்.முட்களை விட்டுவிட்டு ரோஜாக்களை பக்கலாமே என்னலாமுங்கள் வியாக்கியானம்.ஓ அப்படியென்றால் கயிறு என்பதற்காக சனற்கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்ள யார் தயாராய் இருக்கிறீர்கள்.நடப்பதையும்,நடப்பதையும் நாசவழியென்றால்,உண்மைகளை உரசி பொய்களுக்கு தீவையென்ரால் உறுதியாகச் சொல்கிறீர்களே உதவாதவன் என்று.....
உண்மைகளான உணர்வுகளை வெளிப்படையாக ஒப்புவிக்க உயிரெதற்கும் அனுமதிக்கக்கூடாது என்பதர்க்குத்தானே உள்ளத்தை உள்ளே வைத்து உருவத்தால் மூடிவிட்டிருக்கிறான் இறைவன்.சிந்தித்துக்கொண்டேயிருக்கிறேன் உண்மையறிந்தவன் ஊமையாகும்போது உணர்வாளன் உதைவாங்க காரணம் கடவுளா இல்லை காலமா?வாழ்வை ரசிப்பதோடு வரப்போகும் மரணத்தை அர்த்தமுள்ளதாக்க இன்றுகொல் என்றுகொல் என்றென்னாது பின்னாலேயே கூற்றுவன் நிற்பதாய் நினைத்து உள்ளத்தை ஒருகண்ணாடியாய் காண்பிக்க யாவரும் முயலவேண்டுமல்லவா................
தொடர்ந்து விழிக்கும்.......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment