Sunday, March 9, 2008

விழிக்குமா மானுடம்...(3)

மெளனிகளாக வாழும் சமூகத்தின் சலனத்தை சத்தமிட்டுச் சொல்லி சவுக்கடிபட சங்கற்பமெடுத்ததால் கலையாத மெளனங்களோடு கண்டுகொள்ளாமல் கவிழ்ந்து கிடக்கும் மனிதத்தின் மற்றுமொரு பக்கத்தை பகரவிழைகின்றேன்.தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்பதை தவறென்பது உங்கள் வாதம் என்றால் அன்னையின் சேலையை அடுத்தவன் அவிழ்க்கும்போது மெளனிக்க தயாராகிவிட்டீர்கலென்ரல்லவா அர்த்தம்?தன்மானத்தையும் தறித்துவிட்டு தரித்துக்கொண்ட உங்கள் மெளனத்தினாத்தான் உணர்ச்சிகளின் உள்வாங்கல்கள் உங்களைவிட்டு ஓடிவிட உதரவில்லை உங்கள் கரங்கள் .ஆக நீங்களும் மரங்கள்.களவு செய்பவனைக் கண்டுகொள்ளாமலிருந்து காழ்ப்பை மீறி கயவுசெய்ய கற்றுக்கொடுப்பது நீங்களல்லவா?காலவோட்டத்தில் காணமல் போகும் காயத்திற்காக கடமையை மறப்பதுதான் கற்று வந்த பாடமோ?கற்பது கரையேறவென்றால் கற்றபடி நடக்கவும் கற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.கீதை,திருக்குறள்,திருமறை,திருக்குர்றான் போன்றவற்றை செய்யுளாய் படித்த ஆர்வம் செயலுருப்படுத்துவதில் இல்லையே.தண்ணீரில் எழுதப்படாமல் கண்ணீரில் எழுதியிருக்கிறேன் இந்த உண்மையை.
மெளனிகளாய் மெளனித்துக்கிடக்கும் சமூகத்தை மரணச்சாக்காடென்னல் தவறோ?உணர்வுகளை உதறிவிட்டு உசும்பாமல் இருப்பவனை பிணமென இயம்பல் பிழையோ?ஆக நீங்களும், நானும் வாழ்வது மயானத்தில்தான். நாற்சுவரிடையே ஏகாந்தமாய் நன்றாக சிந்தியுங்கள்..... மயானத்தின் மெளனத்தைக் குலையுங்கள்...!மனச்சாட்சிக்கும் மானூடத்திற்குமான மதிலை குடையுங்கள்....!மாறாத சுய நலத்தைக் குறையுங்கள்........! இனி உங்களுக்காக நானும் எனக்காக நீங்களும் யாவருக்குமாக நாங்களும் எங்களுக்காக யாவருமாவோமா??
தொடர்ந்து விழிக்கும்......

No comments: