Thursday, March 6, 2008

விழிக்குமா மானுடம்


உலகமெங்கும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் உறவுகளின் ஓலங்கழுக்கிடையே கட்டவிழ்ந்து கிடக்கும் மானுடத்தைப் பற்றி கதைகவும் காலமொதுக்குங்கள்.எழுத்துக்களின் ஊடல்களையும் தாண்டி உணர்வுகளின் தேடல்களுக்கும் ஒத்துழைப்புத்தாருங்கள்.எழுதப்படுவதற்காக எழாமல் எழுந்தவைகளையே எழுத்துரு என்பவன் நான் என்பதால் மரணித்துக்கொண்டிருக்கும் மானுடத்தை மறந்துவிட்டுப்போக முடியவில்லை. நான் மனக்கிலேசங்களாக கிறுக்குவதை மனதில் எடுத்து களிப்பதும் அல்லது கழிப்பதும் உங்கள் மனச்சந்தோசங்களே..............

போலிகளுக்கிடையே புதுப்பொன்னும் போக்கிழந்து போவது போல், பாவிகளுக்கிடையே பரவியுள்ள பகல் வேசங்களால் நாதியற்றுப்போகிறது நடுவழியில் நலன்கருதும் பாசங்களும்.தேசத்தின் ஓரத்தில் நின்று ஒலித்துக்கொண்டிருக்கும் அலைகள் அடிப்பதால் தேசம் நகராது. ஆனால் மனிதாபிமானம் அரிக்கப்படுகிறது அதிவேக தொடல்பாடல் துடிப்பில். காற்றின் வேகத்தை கையிலெடுக்கத் துடிக்கும் மனிதனின் பேராசைதான் வித்திட்டிருக்கிறது மானுடத்தை மரணப்புதைகுழிக்குள் அனுப்ப. வேகத்தின் மீதம் விதைபோட்டிருக்கிறது மாற்றினமாய் மறுவீட்டை நினைக்க......



தொடர்ந்து விழிக்கும்......

No comments: